கோலாலம்பூர், டிச. 11-
அம்னோவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன், தமது இடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாட்டின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசேனின் புதல்வரான ஹிஷாமுடின், தற்போது ஜோகூர், செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினாக இருந்து வருகிறார்.
தாம் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், இன்னமும் தமக்கு உறுதியாக தெரியாத நிலையில் தமது இடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று முன்னாள் தற்காப்புத்துறை அமைச்சருமான ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.








