15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தடை விதித்துள்ளார்.
தற்போது சிலாங்கூரில் நடைபெறுவது காபந்து அரசாங்கம் என்பதால் மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களின் அதிகாரத்துவ வாகனங்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதியில்லை என்று அமிருடின் ஷாரி விளக்கினார்.