Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்
அரசியல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

Share:

4 மாதக் குழந்தையின் மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், பட்டர்வொர்த், செபராங் ஜெயாவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையம் ஒன்று, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதேவேளையில், அந்த மையத்தின் பதிவுச் சான்றிதழலையும் இரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மக்கள் நல்வாழ்வுக் குழுத் தலைவர் லிம் சியூ கிம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது உட்பட, மாநில சமூக நலத்துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தை பராமரிப்பு மையங்கள் அனைத்து முறையான உரிமம் பெற்றிருப்பதோடு, அது தொடர்பான தரநிலைகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அந்த 24 மணி நேர குழந்தை பராமரிப்பு மையத்தில், நடந்த இச்சம்பவம் தொடர்பாக 2 பெண் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Related News