கோலாலம்பூர், நவ.8-
மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக யு மொபையல் நிறுவனத்தைத் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்க இயலாது என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் திட்டவட்டாக தெரிவித்துள்ளார்.
சுயேட்சையான முறையில் யு மொபையல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதனை மறுபடியும் பரிசீலிக்கவோ அல்லது அதன் நிர்வாகத்தில் தலையிடவோ அரசாங்கம் விரும்பவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுப்படுத்தினார்.
யு மொபையல் நிறுவனம் தேர்வு, எம்.சி.எம்.சி. எனப்படும் மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணைய உறுப்பினர்கள் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.








