Oct 27, 2025
Thisaigal NewsYouTube
கிளந்தானில் மசீச போட்டியிடும் விவகாரம்; பக்காத்தான் ஹராப்பானின் தயார்நிலையை பொறுத்துள்ளது
அரசியல்

கிளந்தானில் மசீச போட்டியிடும் விவகாரம்; பக்காத்தான் ஹராப்பானின் தயார்நிலையை பொறுத்துள்ளது

Share:

கிளந்தானில் சீன வாக்காளர்களை அதிகம் கொண்டுள்ள ஒரேயொரு சட்டமன்ற தொகுதியான கோத்தா லாமா-வில், மசீச கட்சி போட்டியிடுவதற்கான வாய்ப்பு, அத்தொகுதியை விட்டுத்தர பக்காத்தான் ஹராப்பான் எந்த எளவில் தயாராக உள்ளது என்பதை பொறுத்துள்ளது.

அகாடமி நுசந்தாரா ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் கூறுகையில், கடந்த கிளந்தான் சட்டமன்ற தேர்தலில், உறுப்புக்கட்சியான அமனா-விலிருந்து டாக்டர் ஹஃபிட்ஸா முஸ்தகிம் வென்றுள்ள அத்தொகுதியை விட்டுத்தரும் எண்ணத்தை, பக்காத்தான் ஹராப்பான் நிச்சயம் கொண்டிருக்காது என கூறினார்.

30 விழுக்காடு சீன வாக்காளர்களைக் கொண்டுள்ள கோத்தா லாமா தொகுதியில் கவனத்தை செலுத்துவதை விட, மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் மசீச கவனம் செலுத்தலாம்.

ஆனால், அம்னோ கட்சியின் நடப்பு தலைமைத்துவம் பலவீனமாக உள்ளதால், அதில் மாற்றங்களை செய்தால் மட்டுமே, கிளந்தான் மசீச -வால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என அஸ்மி ஹாசன் கூறினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!