Oct 23, 2025
Thisaigal NewsYouTube
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்
அரசியல்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

Share:

புதுடில்லி, டிச. 27-


இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.

சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மன்மோகன் சிங், நேற்று இரவு தனது இறுதி மூச்சை விட்டார். மன்மோகன் சிங் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயது மற்றும் மூப்பு தொடர்பாக உடல் ரீதியாக பல்வேறு உபாதைகளுக்கு மன்மோகன் சிங் ஆனாகினார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று வியாழக்கிழமை அவருக்கு திடீரென்று சுயநினைவு இழப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் உடனடியாக ஈடுபட்டனர்.

முயற்சி பலன் அளிக்காததைத் தொடர்நது இரவு 8 மணியளவில் அவர், வீட்டிலிருந்து புதுடில்லி ஏய்ம்ஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரின் உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாலத்தீவு அதிபர் உட்பட உலகத் தலைவர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Related News