கோத்தா கினபாலு, நவம்பர்.11-
சபா மாநிலத்திற்கு 40 விழுக்காடு வருவாய் திருப்பித் தரப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், அமைச்சரவைக்கும் சபா முதலமைச்சர் ஹஜிஜி நோர், இன்றிரவு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சபா மாநிலத்தின் எதிர்பார்ப்பையும், அதன் அபிலாஷைகளையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் நன்கு புரிந்து வைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சபா மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை மதிப்பதிலும் மத்திய அரசாங்கம் உண்மையிலேயே முழு கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று முதலமைச்சர் ஹஜிஜி நோர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








