பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டுமா? என்பது தொடர்பான விவகாரத்தை மக்களை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் –லிடமே தாம் விட்டு விடுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்த ஆறு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு, இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற கொறடா டாக்டர் ரொனால்ட் கியாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விவகாரத்தை மக்களவை சபா நாயகரிடமே தாம் விட்டு விடுவதாக பிரதமர் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.








