சிலாங்கூர் மாநில சட்டமன்றம் வரும் ஜுன் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது. 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அனுமதி அளித்துள்ளார். சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு சிலாங்கூர் சுல்தான் வழங்கியுள்ள அனுமதியை சுல்தானின் அந்தரங்க செயலாளர் Datuk Mohamad Minir Bani இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலம் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 41 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கொண்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு மேன்மை தங்கிய சுல்தானை சந்திப்பதற்கு தேதி கேட்டு தாம் காத்திருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடீன் ஷாரி கடந்த வாரம் அறிவித்து இருந்த வேளையில் சுல்தானின் அந்தரங்க செயலாளர், சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான தேதியை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.