ஷா ஆலாம், நவ. 21-
அதற்கு அடுத்த நிலையில் அடையாள அடையாள அட்டை தொடர்பாக 414 விண்ணப்பங்கள், குடியுரிமை தொடர்பாக 555 விண்ணங்கள், குழந்தை தத்தெடுப்பு தொடர்பாக 521 விண்ணப்பங்கள், குடிநுழைவுத் துறை தொடர்பாக 119 விண்ணப்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி அட்டை தொடர்பாக 30 விண்ணப்பங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான வீ.பாப்பாராய்டு கூறினார்.
இவற்றில் அதிகமாக மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட 926 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சீனர்கள் தொடர்புடைய 794 விண்ணப்பங்களுக்கும், இந்தியர்கள் தொடர்புடைய 547 விண்ணப்பங்களுக்கும் மற்றும் பிறர் இனத்தவர் சார்ந்த 86 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று, மைசெல் மூலம் தீர்க்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து கோல குபு பாரு உறுப்பினர் பாங் சாக் தாவ் எழுப்பிய கேள்விக்கு பாப்பாராய்டு மேற்கண்டவாறு பதிலளித்தார்.








