Sep 24, 2026
Thisaigal NewsYouTube
அன்வாருக்கு எதிராக மலாய் கட்சிகளை ஓரணியில் திரட்ட ஹம்ஸா முயற்சி
அரசியல்

அன்வாருக்கு எதிராக மலாய் கட்சிகளை ஓரணியில் திரட்ட ஹம்ஸா முயற்சி

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளை ஒரே தேசியக் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி உருவானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அது பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மலாய் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு முக்கியக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஹம்ஸா வலியுறுத்தியுள்ளார்.

அம்னோவும் பாஸும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடாமல் இணைந்து செயல்பட்ட நிலையில், மலாக்கா தேர்தலிலும் அதே அணுகுமுறை குறித்து பரிசீலித்து வருகின்றன.

முன்னாள் பிரதமர்கள் டான் ஶ்ரீ முஹைதீன் யாசின், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் ஆட்சியமைக்க ஹம்ஸா முன்னர் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.

எனினும், தாம் பிரதமராகும் எண்ணம் இல்லை என்றும், பிரதமர் பதவியை விரும்பும் எவருக்கும் தேவையான ஆதரவையும் கூட்டணியையும் உருவாக்க உதவுவேன் என்றும் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

Related News