Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நியமனச் சட்டமன்ற உறுப்பினர் முறையை ரத்து செய்யப் போராடுவேன்: பெக்கான் நானாஸ் பக்காத்தான்  வேட்பாளர் உறுதி
அரசியல்

நியமனச் சட்டமன்ற உறுப்பினர் முறையை ரத்து செய்யப் போராடுவேன்: பெக்கான் நானாஸ் பக்காத்தான் வேட்பாளர் உறுதி

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 'நியமனச் சட்டமன்ற உறுப்பினர்' முறையை ரத்து செய்யப் போவதாகப் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் பெக்கான் நானாஸ் வேட்பாளர் யோ துங் சியோங், உறுதியளித்துள்ளார்.

ஜனநாயகக் கொள்கைகளுக்குப் புறம்பான இந்த முறையை நீக்க, ஜோகூர் மாநில அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப் போவதாக அவர் கூறினார். பக்காத்தான் ஹராப்பான் கூட்ட ணி ஆட்சியமைத்தாலும் இந்த நியமன முறையைத் தாம் கடுமையாக எதிர்ப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்

கடந்த மே மாதம், 5 நியமன உறுப்பினர்களுக்கு வழிவகுத்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்த பாரிசான் நேஷனல் கூட்டணியை அவர் சாடினார். கடந்த 2022 தேர்தலில் இத்தொகுதியை இழந்த ஜசெக.வின் யோ துங் சியோங், இந்த முறை பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் எங் மெங்குக்கு எதிராக நேரடியாகக் களம் காண்கிறார்.

Related News