கோத்தா கினபாலு, டிசம்பர்.05-
மறைந்த சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் குடும்பத்தாருக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தனது பழைய நண்பரான புங் மொக்தார், சபா மக்களின் நலுனுக்காகப் போராடிய, ஒரு வெளிப்படைத்தன்மை கொண்ட மனிதர் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராக, சபா மக்களுக்கும், நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகளும், அர்ப்பணிப்பும் எப்போதும் நமது நினைவுகளில் நிலைத்து நிற்கும் என்றும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமான நுரையீரல் பிரச்சினை மற்றும் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த புங் மொக்தார் இன்று அதிகாலை காலமானார்.
அச்சமற்றவர், சமரசமற்றவர் மற்றும் தனது கருத்தை வெளிப்படையாகப் பேசுவதற்கு அஞ்சாதவராக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்ட ஒரு தலைவரான புங் மொக்தாரின் மறைவு சபா மாநில மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.








