காப்பார் , ஜூன் 21-
காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செலாட் கெலாங் சட்டமன்றத் தொகுதியை காலி செய்யக் கோரி, பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி, மாநில சட்டமன்ற சபா நாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக செலாட் கெலாங்- கிற்கு பொறுப்பேற்று இருந்த அப்துல் ரஷீத் ஆசாரி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி- க்கு ஆதரவு நல்கியது மூலம் கட்சியின் விதிமுறைகளை மீறியுள்ளார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக என்று அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
அந்த தொகுதியில் இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் தொகுதியை காலி செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு மாநில சபாநாயகரை அஸ்மின் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.








