Jul 25, 2026
Thisaigal NewsYouTube
கெடா நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்: சனுசிக்கு சாஹித் ஹமிதி எச்சரிக்கை!
அரசியல்

கெடா நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்: சனுசிக்கு சாஹித் ஹமிதி எச்சரிக்கை!

Share:

பல்லினச் சமூகத்தின் நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளா பெரிகாத்தான் நேசனல் தேர்தல் இயக்குநர் சனுசி, நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதைத் தவிர்த்துவிட்டு கெடா மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்துமாறு பாரிசான் நேசனல் தலைவர் அகமது ஜாகித் ஹமிதி அறிவுறுத்தியுள்ளார்.

சனுசி தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மலேசியாவின் பிற இன மக்களின் பூர்வீகம் குறித்துப் பேசியது பொருத்தமற்றது என்றும், நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து, தலைவர்கள் கவனமாகப் பேச வேண்டும் என்றும் அகமது ஜாகித் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான அகமது ஜாகித், நெகிரி செம்பிலான் தேர்தலைத் தங்களின் வழியில் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற இனங்களின் பின்னணியைக் குறைத்துப்பேசுவதை நிறுத்தும்படியும் கடுமையாகக் கேட்டுக் கொண்டார்.

Related News