Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தன்னிச்சையாக போட்டியிடுவதற்கு முடிவு
அரசியல்

தன்னிச்சையாக போட்டியிடுவதற்கு முடிவு

Share:

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி தன்னிச்சையாக போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல், மூடா கட்சி தன்னிச்சையாக போட்டிடும் என்று அக் கட்சியின் உயர்மட்டக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக மூடா கட்சி இடம் பெற்று இருந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பாளையும், பாரிசான் நேஷனலையும் எதிர்த்து அக்கட்சி போட்டியிடவிருக்கிறது என்பதையே சையிட் சாடிக்கின் இந்த அறிவிப்பு காட்டுகிறது.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மூடா கட்சியின் சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் சையிட் சாடிக் இதனை அறிவித்துள்ளார்.. ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகளின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மூடா கட்சி, திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுவதையும் சையிட் சாடிக் மறுத்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானின் ஓர் உறுப்புக்கட்சியாக இணைவதற்கு மூடா கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்துள்ள விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News