Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும்

கோலாலம்பூர், ஜூன்.08-

பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் உண்மைக்குக் காவலனாகவும் செயல்படும் என உறுதியளித்துள்ளார் அதன் செயற்குழு உறுப்பினர் என். கோபிராஜ். தவறான தகவல்கள் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதைத் தடுக்கவும், உண்மைக்குப் பாதுகாவலனாகச் செயல்படவும் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இளைஞர்களின் குரல் கொள்கைகளிலும் திட்டங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு, கல்வி, மனநலம், வாழ்க்கைச் செலவு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் கோபிராஜ் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →