சிப்பாங், நவ. 25-
65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை புதுப்பிப்பதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உடல் ரீதியான மருத்துவப்பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற பரிந்துரை இன்னமும் ஆய்வில் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் நிபந்தனையை விதிப்பது மீதான பரிந்துரையை தாங்கள் வரவேற்பதாக சிப்பாங்கில் தேசிய லோஜிஸ்டிக் பணிக்குழுவின் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை குறிப்பிட்டார்.
எனினும் மூத்தக்குடிமக்களுக்கு எதிராக எந்தவொரு நிபந்தனையும் விதிப்பதற்கு முன்னதாக அந்த நிபந்தனை மீதான உத்தேசப்பரிந்தரைகள் முழுமையாக ஆராயப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக அந்தோணி லோக் மேலும் கூறினார்.
இந்த உத்தேசத்திட்டத்தினால் எந்தவொரு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடாமல் இருக்க இதனை மிக கவனமாக ஆராய வேண்டியுள்து என்று அந்தோணி லோக் விளக்கினார்.








