May 4, 2026
Thisaigal NewsYouTube
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது
அரசியல்

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

Share:

தேசிய நிதி கூட்டுறவுச் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவை வழங்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ பா. சகாதேவன் அறிவித்தார்.

இந்தக் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டு தணிக்கையிடப்படாத கணக்கறிக்கையின் வழி 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது.

இதன் வழி கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் வாரியக் குழுவினரின் பரிந்துரையின் வழி அதன் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவை வழங்க முடிவு எடுத்துள்ளனர் என்றார்.

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் பேரா மாநில வட்டாரக் கூட்டம் ஈப்போவில் உள்ள செம்பிறை சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியார்களிடம் பேசுகையில் டத்தோ சகாதேவன் இதனை தெரிவித்தார்.

துன் வீ.தி. சம்பந்தனால் தோற்றுவிக்கப்பட்ட தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தை துன் சம்பந்தனின் மறைவிற்கு பிறகு டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம், டத்தோ சகாதேவன், டத்தோ கிளிராஜ் ஆகியோருக்கு பேரா மாநில உறுப்பினர் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த மணிமாறன் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் மிகச்சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவது தமது மகிழ்ச்சியை தெரிவித்தார் மற்றொரு உறுப்பினரான சித்தியவான், சுங்கை வாங்கியை சேர்ந்த எஸ். ராதை.

நாடு தழுவிய நிலையில் 60 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், பேரா மாநிலம், அதிக உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக விளங்குகிறது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு