ஈப்போ , செப்டம்பர் 08-
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்க கோர் மிங், பேரா மாநில டிஏபி தலைவராக 11 ஆவது ஆண்டாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஈப்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பேரா மாநில டிஏபி -யின் 20ஆவது பெராளர் மாநாட்டில் மாநில டிஏபி-க்கு தொடர்ந்து தலைமையேற்க ங்க கோர் மிங் தெர்வு செய்யப்பட்டார் .
பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ங்க கோர் மிங், மாநிலத்தின் 15 செயலவை உறுப்பினர்கள் போட்டியின்றி தெர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
மாநில துணைத்தலைவராக பத்து கஜாஹ் நாடாளுமன்ற உறுப்பினர் வி .சிவகுமார் தெர்வு செய்யப்பட்ட வேளையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் , மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஏ சிவநேசன் , இரண்டு உதவித்தலைவர்களில் ஒருவராக தெர்வு செய்யப்பட்டுள்ளார் .








