Sep 21, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

Share:

புதிய அரசியல் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதால் 'பெர்சத்து' (Bersatu) கட்சி 'பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து தானாகவே வெளியேறி விட்டது என்ற பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்று தவறானது என்று பெர்சத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் விதிமுறைப்படி எந்தவொரு கட்சியும் தானாக வெளியேற முடியாது என்றும், கட்சியின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து அதன் தலைவர் மன்றமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுவரை அது போன்ற கூட்டம் எதுவும் நடைபெறாததால், பெர்சத்து இன்னும் கூட்டணியின் அங்கீகரிக்கப்பட்ட அங்கமே என்று அஸ்மின் அலி வலியுறுத்தியுள்ளார்.

பெரிக்காத்தான் கூட்டணி என்பது பாஸ் கட்சியின் ஒரு கிளை அல்ல என்று கூறியுள்ள பெர்சத்து தகவல் தொடர்புத் தலைவர் துன் பைசல், பெரிக்காத்தான் நேஷனல் விதிமுறைகளை மீறி தங்களை தொகுதிப் பங்கீட்டுக் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தது குறித்து சங்கங்களின் பதிவிலாகாவிடம் புகார் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related News

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்