Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

MyBorderPass செயலி மூலம் QR குறியீடு முறை விரிவுபடுத்தப்படும்

Share:

ஜன.11-

மலேசியாவிலிருந்து வெளியேறும் ஆசியான் நாடுகளின் பயணிகளுக்கும் MyBorderPass செயலி மூலம் QR குறியீடு முறை விரிவுபடுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மலேசியா ஆசியான் நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதால், நாடுகளின் முக்கிய நுழைவாயில்களில் வருகை, வெளியேற்றம் ஆகிய நடைமுறைகளைச் சீராக்குவது குடிநுழைவுத் துறையின் பொறுப்பாகும். தற்போது, இந்த முறை மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே KLIA 1ஆம் 2ஆம் முனையங்களில் பயன்படுத்த கிடைக்கிறது.

இந்த புதிய முறை பயனர்கள் தங்கள் கடப்பிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும், கடப்பிதழில் முத்திரை பதிக்கும் முறையை தவிர்க்கிறது, ஏனெனில் தகவல்கள் அனைத்தும் மின்னணு முறையில் சேமிக்கப்படுகின்றன. இந்த முறை மற்ற முக்கிய அனைத்துலக விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் சைஃபுடின் இந்த முறையைப் பயன்படுத்தி வெறும் நான்கு வினாடிகளில் குடிநுழைவு சோதனையை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News