Sep 5, 2026
Thisaigal NewsYouTube
சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்
அரசியல்

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

Share:

ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

புகாரைத் திரும்பப் பெறுமாறு சில தரப்பினர் புகார்தாரருக்கு அழுத்தம் கொடுத்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உள்நிலை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை முடிவடைந்ததும், நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோகூர் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், புகார் அளிப்பதைத் தடுப்பது, அழுத்தம் கொடுப்பது அல்லது குற்றச்சாட்டை மறைப்பதற்கு எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News