பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், அம்னோவை தீவிரமாக ஆதரித்துப் பேசியிருப்பது குறித்து, பிகேஆர் இளைஞர் பிரிவான ஏஎம்கே-வின் தகவல் பிரிவு தலைவர் டேனிஷ் ஹைருடின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகேஆர், அம்னோவின் பலத்தை மட்டுமே நம்பியிருப்பதாக துவான் இப்ராஹிம் கூறியிருப்பது ஆச்சரியமளிப்பதாக டேனிஷ் தெரிவித்தார்.
15ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் 31 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், அம்னோ 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாஸ்–அம்னோ ஒத்துழைப்பில் யாரும் “மூத்த சகோதரர், இளைய சகோதரர்” என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது என்று முன்பு கூறிய துவான் இப்ராஹிம், தற்போது அம்னோவை “மூத்த சகோதரர்” போல் காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அம்னோவுக்கு பிகேஆர் மீது பிரச்சினை இருந்தால், அதனை அம்னோ தலைவர்களே வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் டேனிஷ் வலியுறுத்தினார்.
“அம்னோவுக்கு அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளராக பாஸ் செயல்பட வேண்டிய நிலை இன்னும் ஏற்படவில்லை,” என்றும் அவர் கூறினார்.








