Sep 7, 2026
Thisaigal NewsYouTube
“பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுகிறோம்” — ஓங் கியான் மிங்கைக் குறி வைத்தாரா அந்தோணி லோக்?
அரசியல்

“பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுகிறோம்” — ஓங் கியான் மிங்கைக் குறி வைத்தாரா அந்தோணி லோக்?

Share:

ஜசெக கட்சியைச் சேர்ந்த பாங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் திடீரென கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்ததையடுத்து, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மர்மமான முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “Habis madu, sepah dibuang” என்ற மலாய் பழமொழி வாசகத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஒருவரைத் தேவைக்காகப் பயன்படுத்திவிட்டு, பின்னர் அவரை ஒதுக்கிவிடும் சூழ்நிலையையே இந்தப் பழமொழி குறிக்கும்.

இந்தப் பதிவு வெளியானதும், சமூக ஊடகவாசிகள் பலரும் இது ஓங் கியான் மிங்கை மறைமுகமாக விமர்சிக்கும் பதிவா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுமார் 14 ஆண்டுகள் ஜசெக கட்சியில் இருந்த ஓங் கியான் மிங், இன்று திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் சேரவோ அல்லது போட்டியிடவோ போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவு தலைவரான கைரி ஜமாலுடினுக்கு 16-வது பொதுத் தேர்தல் பிரசாரத்தில் உதவப் போவதாகவும் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.

Related News

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

அரசாங்கத்தைக்  கவிழ்க்க அமெரிக்கா உதவி வழங்க முன்வந்தது – ஹாடி அவாங் பரபரப்பு குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவி வழங்க முன்வந்தது – ஹாடி அவாங் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜாஹிட்  வழக்கில் பாஸ் பிரதிநிதி அறியாமையுடன் பேசுகிறார் – ராம்கர்பால்

ஜாஹிட் வழக்கில் பாஸ் பிரதிநிதி அறியாமையுடன் பேசுகிறார் – ராம்கர்பால்