Sep 12, 2026
Thisaigal NewsYouTube
இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்
அரசியல்

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

Share:

மலேசிய அரசியல், இனம் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதற்கு, மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் டான் சீ கூனின் அரசியல் மரபு சிறந்த எடுத்துக்காட்டு என பொருளாதார நிபுணர் ஜோமோ க்வாமே சுந்தரம் தெரிவித்துள்ளார்.

டான் சீ கூன் மறைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற பொது கருத்தரங்கில் பேசிய ஜோமோ, மலேசிய அரசியல் ஒரு காலத்தில் இன அடிப்படையில் அல்லாமல், சிந்தனைகள், சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் நாட்டின் எதிர்காலக் கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கியதாகக் கூறினார்.

1960-களில் இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசியல் இயக்கங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், நாட்டின் அரசியல் போக்கை மாற்றியமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

1969-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இன அடிப்படையிலான அரசியல் வலுப் பெறத் தொடங்கியது என்றும் ஜோமோ குறிப்பிட்டார்.

இன அரசியல் மலேசியாவின் இயல்பான அரசியல் பண்பு அல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும், டான் சீ கூனின் போராட்ட மரபைத் தொடர்ந்து, இனங்களைத் தாண்டிய பொதுநல அரசியலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்