Sep 12, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!
அரசியல்

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

Share:

ஜசெக கட்சியானது அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டும் என அக்கட்சியின் சிறப்பு மாநாட்டில் பெரும்பாலான பேராளர்கள் வாக்களித்துள்ளனர்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்மாநாட்டில், பதிவான 2,099 வாக்குகளில், 1,857 வாக்குகள் அதாவது 88 சதவிகிதம் அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவாக பதிவாகின.

அதேவேளையில், 242 பேர் அரசாங்கத்திலிருந்து ஜசெக வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக செயலாளர் சா கீ சின் இந்த வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்தார்.

இந்த சிறப்பு மாநாட்டில் மொத்தம் 2,223 பேராளர்கள் கலந்து கொண்டதாகவும், அவற்றில் வாக்களிக்கத் தகுதியுடைய பேராளர்களில் 52.12 சதவிகிதம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பேராளர்களின் பங்கேற்பு குறித்து கருத்துரைத்த ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், இது அதிகமான பங்கேற்பாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.

இவர்கள் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் கிளைகளிலிருந்து வந்தவர்கள் என்றும், தேர்தல்களில் கூட வாக்குப்பதிவு சுமார் 70 சதவிகித அளவில் தான் தங்களுக்கு கிடைத்தது என்றும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுடன் ஜசெக இணைந்து செயல்படுவது குறித்து கட்சிக்குள் நிலவும் அதிருப்தி தொடர்பாக கேட்கப்பட்ட போது, பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்துடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசியுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த அரசாங்கம் நிலையாக இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம் என்றும், மடானி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாம் முன்னெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் நிலையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்தோணி லோக், பேராளர்கள் முன்வைத்த கருத்துகளுக்கு கட்சி மதிப்பளிப்பதாகவும், அவற்றை அமைச்சரவை மூலம் அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதாகவும் அந்தோணி லோக் உறுதியளித்தார்.

தற்போது ஜசெக அரசாங்கத்தில் 5 அமைச்சர்களும், 7 துணை அமைச்சர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்