Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்
அரசியல்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி செய்யும் கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் இன்னும் 2 வாரங்களில் தேர்தல் இயந்திரப் பணிகளை பிகேஆர் கட்சி முன்கூட்டியே தொடங்கும் என்று அக்கட்சியின் தேர்தல் இயக்குநரும் உதவித் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை, மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில் நிறைவுரையாற்றிய அமிருடின், எதிர்வரும் தேர்தலுக்கான களப் பணிகளை கட்சி உறுப்பினர்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளையில், தேர்தல் குழுவின் கட்டமைப்பு இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்றும், எதிர்வரும் தேர்தலில் பிகேஆர் தீவிரமாக களமிறங்கி போராடும் என்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமிருடின் குறிப்பிட்டார்.

நேற்று சனிக்கிழமை கெடா மாநில மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர், Datuk Seri சிலாங்கூரை தளமாகக் கொண்டு அந்த மாநிலத்திலும் பக்காத்தான் ஹராப்பானைத் தோற்கடிக்க பாஸ் இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக சிலாங்கூர் மாநிலம் விளங்குவதால், அந்த மாநிலம் முக்கிய இலக்காக இருப்பதாக சனூசி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த சவாலுக்கு பதிலளித்த அமிருடின், பிகேஆர் தனது அரசியல் ஒருங்கிணைப்பின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், கட்சியின் இலக்குகள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு யாருடன் போட்டி, யாரை வீழ்த்த போராட வேண்டும் என்பதில் பிகேஆர் மிகச் சரியாகப் பயணித்து வருவதாகவும் அமிருடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்