Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்
அரசியல்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி இடையிலான நம்பிக்கை உறவு, ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதை அன்வார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தக் கருத்து, முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் முன் வைத்த தனிப்பட்ட பார்வை என்றும் மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் பேராளர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

“கைரி ஜமாலுடின் மோதலைப் பார்க்கிறார்; நான் அமைதியைப் பார்க்கிறேன்,” என்று கூறிய அன்வார், ஸாஹிட்டுடனான உறவில் தேசிய அளவில் பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து போட்டியிட்டது, பக்காத்தான் ஹராப்பானுடனான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியதாக கைரி கூறியிருந்தார்.

இதனிடையே, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் ஜாஹிட் மற்றும் அம்னோ ஆற்றிய பங்கை தமது காங்கிரஸ் உரையில் தாம் நன்றியுடன் குறிப்பிட்டதாக அன்வார் சுட்டிக் காட்டினார்.

மாநில அளவில் சில சிறிய பிரச்சினைகள் இருப்பது இயல்பானது என்றும், ஆனால் அது தேசிய அளவிலான உறவைப் பாதிக்கவில்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்