பிகேஆர் கட்சியானது தனது பலவீனங்களை சுயபரிசோதனை செய்து, அவற்றை ஏற்றுக்கொண்டு நிலையான கட்சியாக தொடர்ந்து முன்னேற வேண்டும் என Keadilan மகளிர் பிரிவுத் தலைவரும், கல்வி அமைச்சருமான ஃபட்லினா சிடேக் வலியுறுத்தியுள்ளார்.
மலாக்கா ஆயர் கெரோ-வில் இன்று வெள்ளிக்கிழமை துவங்கிய மகளிர் மற்றும் பிகேஆர் கட்சியின் இலைஞ்சர் பிரிவாலர் கூட்டு மாநாட்டில் உரையாற்றிய அவர், அற்பமான விவகாரங்களில் கவனம் செலுத்த இனி நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் குரலைக் கேட்டு, சிறந்த சேவையை வழங்குவதுடன், அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க, கட்சி உறுப்பினர்கள் இந்த மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், புதிய தலைமுறையினருக்கு தலைமைப் பொறுப்புகளை வழங்கி, கட்சியின் எதிர்கால தலைவர்களாக உருவாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ஃபட்லினா குறிப்பிட்டுள்ளார்.
பிகேஆர் கட்சியின் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மாநாடு இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








