Aug 16, 2026
Thisaigal NewsYouTube
“நண்பர்கள் எதிரிகளானாலும் பிகேஆர் நிலைத்து நிற்கும்” – பிகேஆர் தேசிய மாநாட்டில் ஃபாட்லீனா சீடேக் சூளுரை
அரசியல்

“நண்பர்கள் எதிரிகளானாலும் பிகேஆர் நிலைத்து நிற்கும்” – பிகேஆர் தேசிய மாநாட்டில் ஃபாட்லீனா சீடேக் சூளுரை

Share:

பிகேஆர் கட்சியானது பல்வேறு துரோகங்களை எதிர்கொண்டாலும், தொடர்ந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில், இன்று ஞாயிற்றுக்கிழமை தனது நிறைவுரையில் பேசிய நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாட்லீனா, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள போதிலும் அதனை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை கடுமையாக விமர்சித்தார்.

தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு துரோகங்களை சுட்டிக் காட்டிய ஃபாட்லீனா, பிகேஆர் இதைவிட மோசமான துரோகங்களை ஏற்கனவே சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த முன்னாள் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவலை அவர் நினைவுகூர்ந்தார்.

அதேவேளையில், வெளியில் எத்தகைய அரசியல் நகர்வுகள் நடந்தாலும் அதை எதிர்கொள்வோம் என்றும், தங்களது பாதையில் எத்தகைய தடைகள் வைக்கப்பட்டாலும் அவற்றை முறியடிப்போம் என்றும் ஃபாட்லீனா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிகேஆர் கட்சியின் எதிர்கால வலிமை, கூட்டணி அரசியலில் யார் தங்களுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், கட்சிக்காக தொடர்ந்து களத்தில் உழைக்கும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பில்தான் உள்ளது என்றும் ஃபாட்லீனா வலியுறுதியுள்ளார்.

Related News

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்