Sep 14, 2026
Thisaigal NewsYouTube
வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை
அரசியல்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

Share:

இந்திய சமுதாயத்திற்கான கொள்கைகளை வகுப்பதில் முக்கிய முன்னெடுப்பாக, கல்வித்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் 19 இந்திய தொண்டு நிறுவனங்களுடன் ‘பெர்சாமா’ கட்சி முக்கிய கலந்துரையாடலை நடத்தியதாஜ பெர்சமா கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இந்திய தலைவர்களுடன் நடத்தப்பட்ட அந்த சந்திப்பில் மூன்று முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, இந்திய சமுதாயத்திற்காக தனியான ஒரு நிறுவனம் உருவாக்க வேண்டும்.இரண்டாவதாக, இந்திய சமூகத் திட்டங்களுக்கு நிதியளிக்க அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து செயல்படும் நிதி பொறிமுறை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, அமைச்சரவை அளவில் ஒரு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்று கூலிமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ரஃபிஸி குறிப்பிட்டார்.

இந்தப் பரிந்துரைகள் ‘பெர்சாமா’வின் அடுத்த மாதம் வெளியாகும் கொள்கை ஆவணங்களில் இணைக்கப்படும் என ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.

மேலும், இந்திய சமுதாயத்திற்கு வெறும் வாக்குறுதிகளை வழங்காமல், ஒவ்வொரு திட்டத்திற்கான செலவுகளையும் முழுமையாகக் கணக்கிட்டு, யதார்த்தமான செயல்திட்டங்களாகவே வெளியிட வேண்டும் என்பதே பெர்சமாவின் நோக்கமாகும் என்று ரஃபிஸி விளக்கினார்.

Related News

எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து

எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி