Sep 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா தேர்தல்: பாரிசான் - பக்காத்தான் இடையே விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை
அரசியல்

மலாக்கா தேர்தல்: பாரிசான் - பக்காத்தான் இடையே விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

Share:

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், எதிர்வரும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறுகையில், தற்போது இரு கூட்டணிகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகள் மட்டுமே நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மலாக்கா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தைகளை நடத்தி இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி, அப்துல் ரவுஃப் யுசோவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், அம்னோ மற்றும் பாரிசான் மத்திய தலைமையின் கொள்கை முடிவுகளுக்காக ரவுஃப் காத்திருப்பதாகவும் ஸாஹிட் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த தேர்தலில் வென்ற 21 தொகுதிகளையும் பாரிசான் நேஷனல் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ள ஸாஹிட், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்காவில், 2021-ஆம் ஆண்டு தேர்தலில், பாரிசான் நேஷனல் 21 இடங்களிலும், பக்காத்தான் ஹராப்பான் 5 இடங்களிலும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், தற்போதைய மாநில அரசின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

Related News

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

அரசாங்கத்தைக்  கவிழ்க்க அமெரிக்கா உதவி வழங்க முன்வந்தது – ஹாடி அவாங் பரபரப்பு குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவி வழங்க முன்வந்தது – ஹாடி அவாங் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜாஹிட்  வழக்கில் பாஸ் பிரதிநிதி அறியாமையுடன் பேசுகிறார் – ராம்கர்பால்

ஜாஹிட் வழக்கில் பாஸ் பிரதிநிதி அறியாமையுடன் பேசுகிறார் – ராம்கர்பால்