Dec 22, 2025
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வு முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தெரியும் ! - துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி தகவல்
அரசியல்

துபாய் நகர்வு முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தெரியும் ! - துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி தகவல்

Share:

துபாயில் தரையிறங்கும் முன்னரே, துபாய் நடகர்வு முன்னெடுக்கப்படும் விவகாரம் குறித்து தமக்குத் தெரியும் எனக் கூறினார் துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி.

அந்த முன்னெடுப்பில் சம்பந்தப்பட்டவர்கள் அந்நகருக்குச் சென்ற உடனேயே. தமது தரப்புக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டு விட்டதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட்சில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அரசாங்கத்தில் உள்ள சில பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் விவாதத்தைத் தொடர்ந்து "துபாய் நகர்வு" பற்றிய ஆருடங்கள் வெடித்தன.

நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்ளக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணவும், அந்த முன்னெடுப்புக்கான வேலைகளைப் பகிர்ந்து கொடுக்கவும் அந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி வீண் முயற்சி எனக் கூறிய ஸாஹிட், தற்போது மூன்றில் 2 பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருப்பதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றால், எதிர்வரும் 16 ஆம் பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என ஸாஹிட் மேலும் சொன்னார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்