கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா.சிவபிரகாஷ், கோலகுபு பாரு மக்களின் நலனை முன்நிறுத்தி 5 அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தம்மை மக்கள் தேர்வு செய்வார்களேயானால் கோலகுபு பாரு, உயர் தரமான வருமானத்தை தரவல்ல அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு பகுதியாக முன்னேடுக்கப்படும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் சுற்றுலா தொழில்துறை, இளையோர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குல், ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் சார்ந்த சமய நடவடிக்கைகளுக்கு அதீத முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருதல், தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து அம்ச கொள்கை அறிக்கையை கோலகுபு பாரு மூடா கட்சி வேட்பாளரும், ஒரு கல்விமானுமாகிய டாக்டர் சிவபிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்


