May 3, 2026
Thisaigal NewsYouTube
ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு
அரசியல்

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு

Share:

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஜோகூரைச் சேர்ந்த கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம் ஒன்றின் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாசிர் கூடாங்-ஐத் தளமாகக் கொண்ட எஸ்டார் விஷன் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 80 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், கடந்த ஆறு மாதங்களாகத் தங்களுக்கு ஊதியமும், மிகைநேரப் பணி கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்ததையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

104 வங்காள தேசத் தொழிலாளர்கள் மற்றும் 65 மலேசியர்கள் உட்பட மொத்தம் 169 தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ள 'எஸ்டார் விஷன்' நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊதியப் பட்டுவாடாவைத் தாமதப்படுத்தி வருவதாகவும், அந்த மாதத்திற்கான சில ஊதியங்கள் தவணைகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் துறை கண்டறிந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக, இதுவரை 16 விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எட்டு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும், தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டால், அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்படாது என்றும் அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு