கோத்தா பாரு, பிப்ரவரி.16-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுனுக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘Reset’ கூட்டத்தில் பங்கேற்றதற்காக கெதெரே நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Khlir Mohd Nor மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஏற்பாடு செய்யும் எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கக்கூடாது என பெர்சத்து கட்சி அறிவித்திருந்தும் கூட, Khlir Mohd அக்கூட்டத்தில் பங்கேற்றதால் இந்நடவடிக்கையானது எடுக்கப்படுவதாக கிளந்தான் பெர்சத்து தலைவர் டத்தோ கமாருடின் முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற குற்றங்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையானது, மத்தியத் தலைமையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் கமாருடின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பெர்சத்து கட்சியிலிருந்து அதன் துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் உட்பட 16 உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் நீக்கப்பட்டனர்.
அதனையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி நீக்கப்பட்டவர்களின் கூட்டங்களில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது என அறிக்கையொன்றின் வாயிலாக அறித்திருந்தார்.
இந்நிலையில், Khlir Mohd மீது தலைமை எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து தற்போதைக்கு எதுவும் வெளியிட இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








