Jan 20, 2026
Thisaigal NewsYouTube
முடியாட்சியை பாதுகாக்க பிரதமர் அன்வார் உறுதி
அரசியல்

முடியாட்சியை பாதுகாக்க பிரதமர் அன்வார் உறுதி

Share:

சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை கேலி செய்யவோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்யவோ ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்தார். அரச பரிபாலனத்தை எவ்விதமான அச்சுறுத்த​ல்களிலிருந்தும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் எவ்வித விட்டுக்கொடுக்கும் போக்கும் கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முடியாட்சி மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்த அல்லது ​சீண்டிப்பார்க்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த தினத்தையொட்டி ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News