Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்
அரசியல்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.10-

பெர்சத்து கட்சியின் மகளிர் பிரிவு தலைவரான மாஸ் எர்மியாத்தி சம்சுடின், கட்சியின் அரசியலமைப்பு மற்றும் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு தேர்தல் காலங்களுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனது Instagram கணக்கில் இடைநீக்க அறிவிப்பை பகிர்ந்துள்ள மாஸ் எர்மியாத்தி, கட்சியின் அரசியலமைப்பு, பிரிவு 9.1.4 மற்றும் உறுப்பினர்களுக்கான ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் தாம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரோனால்ட் கியாண்டியும் , இரண்டு தேர்தல் காலங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த இரு இடைநீக்கமும் உடனடியாக அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News