பேரா, நவ. 29-
பேரா மாநில அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமாக 1.52 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான இந்த வரவு செலவுத் திட்டம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் என அம்மானில முதல்வர் Datuk Seri Saarani Mohamad குறிப்பிட்டார்.
அந்த வரவு செலவுத் திட்டத்தில். பேரா மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத ஊதிய சிறப்பு உதவி நிதியை வழங்கப்பட உள்ளதாகவும் சராணி கூறினார். அந்த உதவி நிதி அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில அரசால் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள், Orang Besar Jajahan, கிராமத் தலைவர்கள், MySTEP இன் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த சிறப்பு உதவி நிதி வழங்கப்பட உள்ளது.
அதே சமயம், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 538 மில்லியன் ரிங்கிட்டும் , நிர்வாக செலவுகளுக்கு 981.80 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Perak Makmur, Rakyat Sejahtera என்ற கருபொருளை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, 2023 - 2024 ஆம் ஆண்டுகளைப் போலவே, மக்கள் நலன், முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிர்வகித்தல், மனித மூலதன மேம்பாடு, இளைஞர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கியக் கூறுகளில் கவனம் செலுத்துகிறது என சராணி விளக்கமளித்தார்.
மக்களின் நலனுக்காக, மொத்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 628.65 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக நலத்துறைக்கு 45.94 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.14 மில்லியன் ரிங்கிட் அதிகம். இந்த நிதியில் பெரும்பகுதி பொது உதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என சராணி மேலும் தெரிவித்தார்.








