புத்ராஜெயா, நவம்பர்.03-
கடந்த மாதம் இறுதியில் மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம், அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் உரிமைகள் தொடர்பான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளும், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் நிலைப்பாட்டிற்கு இந்த ஒப்பந்தம் முரணானது என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் முரணானது என்பதற்கு அரசிலமைப்புச் சட்டத்தின் 153 ஆவது விதியை துன் மகாதீர் மேற்கோள் காட்டிப் பேசினார்.








