ஆறு மாநிலங்களுக்கான தேர்தலில் 245 தொகுதிகளில் 570 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 71 பேர் பெண் வேட்பாளர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியே அதிகமான பெண் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அக்கூட்டணி களம் இறக்கியுள்ள 137 வேட்பாளர்களில் 26 பேர் பெண்கள் ஆவர்.அதேவேளையில் பாரிசான் நேஷனல் களம் இறக்கியுள்ள 108 வேட்பாளர்களில் 12 பேர் பெண்கள் ஆவர். பெரிக்காத்தான் நேஷனல் களம் இறக்கியுள்ள 245 வேட்பாளர்களில் 19 பேர் பெண்கள் ஆவர். மூடா கட்சி களம் இறக்கியுள்ள 19 வேட்பாளர்களில் 10 பேர் பெண்கள் ஆவர். சதவிகித அளவில் மூடா கட்சியே அதிக பெண் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
