Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்கான முதன்மை நடவடிக்கையே

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்கான முதன்மை நடவடிக்கையே

தங்காக், ஜூன்.29-

அம்னோவும் தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து அமைத்துள்ள அரசாங்கம், அரசியல் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு முதன்மை நடவடிக்கை என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார். இது அம்னோ, நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்தது என்று பொருள்படாது என்றும், அம்னோ அதன் பாரம்பரியக் பங்காளிகளான மசீச, மஇகா, சபா பிபிஆர்எஸ் ஆகியவற்றுடன் தொடர்ந்து நிலை பெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

15வது பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய நிலைத்தன்மைக்காகவே ஒற்றுமை அரசாங்கத்தில் இணைய முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கினார். கடந்த பொதுத் தேர்தல்களில் அம்னோ சந்தித்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முகமட் ஹாசான் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →