Sep 23, 2026
Thisaigal NewsYouTube
'பிபிஎன்' கூட்டணி யோசனை எங்கிருந்து வந்தது? – ஹம்சாவின் பரிந்துரையை நிராகரித்த சனுசி
அரசியல்

'பிபிஎன்' கூட்டணி யோசனை எங்கிருந்து வந்தது? – ஹம்சாவின் பரிந்துரையை நிராகரித்த சனுசி

Share:

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் முன்வைத்த ' பிஎன்பி என்ற ‘பெரிக்காத்தான்–பாரிசான் நேஷனல் கூட்டணி' என்ற யோசனையை, பாஸ் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் நிராகரித்துள்ளார்.

இந்த பெயர் குறித்து கூட்டணித் தலைவர்கள் மட்டத்தில் ஒரு போதும் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், இந்த யோசனை "திடீரென எங்கிருந்து வந்தது" என்றும் சனுசி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனலுக்கு தனித்த அரசியல் கூட்டணியும், பாரிசான் நேஷனலுக்கு தனித்த கூட்டணியும் உள்ள நிலையில், 'பிபிஎன்' என்ற பெயரில் எந்தக் கட்சியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதனைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் அதனை ஒரு சாதாரண கருத்து என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ளுமாறும் Sanusi விளக்கமளித்துள்ளார்.

Related News