Sep 22, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை கிடைக்க நீண்ட காத்திருப்பு: 88 வயது மூதாட்டி டாக்சியில் தனியாக வந்து நெகிழ்ச்சியுடன் வாக்களிப்பு
அரசியல்

குடியுரிமை கிடைக்க நீண்ட காத்திருப்பு: 88 வயது மூதாட்டி டாக்சியில் தனியாக வந்து நெகிழ்ச்சியுடன் வாக்களிப்பு

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.01-

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது 75-ஆவது வயதில் குடியுரிமையான MyKad பெற்ற 88 வயது மூதாட்டி எம். கிருஷ்ணம்மா, போக்குவரத்துச் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் டாக்சி பிடித்துத் தனியாக வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையொட்டி, Sheikh Haji Mohd Said இடைநிலைப்பள்ளி வாக்களிப்பு மையத்திற்கு கிருஷ்ணம்மா வந்திருந்தார். பிள்ளைகள் வேறோர் இடத்தில் வசிக்க, வாகன வசதி ஏதுமின்றி தனியாக வாழும் அவர், நாட்டின் கடமையை நிறைவேற்றுவதில் எந்தச் சாக்கும் சொல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

முன்பு சிவப்பு அடையாள அட்டை வைத்திருந்த அவர், பல வருடக் காத்திருப்புக்குப் பின் 75 வயதில் மலேசியக் குடியுரிமை பெற்றார். இது அவர் வாக்களிக்கும் இரண்டாவது முறையாகும். மலேசியராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், சிரமங்களைக் கடந்து வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்