நவ.22-
அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ முகைதீன் யாசினை கெராக்கான் கட்சி முன்மொழிந்தது.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கெராக்கான் கட்சியின் பேராளர் மாநாட்டில் பிரதமர் வேட்பாளராக முகைதீன் யாசினை முன்மொழிந்த நிலையில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் டோமினிக் லாவ் உறுதிப்படுத்தினார்.
முகைதீனின் அனுபவம், அவர் கொண்டுள்ள கூட்டுக்கடப்பாடு மற்றும் பெரிக்காத்தான் நேஷனலில் அவர் கொண்டுள்ள ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரதமர் வேட்பாளராக அவரின் பெயரை கட்சி முன்மொழிந்துள்ளதாக டாக்டர் டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.
அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனலின் முதன்மை கூட்டணிக் கட்சியான பாஸ், பிரதமர் வேட்பாளர் பதவிக்கு குறி வைத்திருப்பதை டோமினிக் லாவ் ஒப்புக்கொண்டுள்ளார்.








