Sep 23, 2026
Thisaigal NewsYouTube
யூதர்கள் மீதான வெறுப்பால் இஸ்ரேலை எதிர்க்கவில்லை: பிரதமர் அன்வார்
அரசியல்

யூதர்கள் மீதான வெறுப்பால் இஸ்ரேலை எதிர்க்கவில்லை: பிரதமர் அன்வார்

Share:

யூதர்களை எதிர்ப்பதற்காக இஸ்ரேலை மலேசியா எதிர்க்கவில்லை; மாறாக, அங்கு நடக்கும் கொடுமைகளையும் வன்முறைகளையும் எதிர்ப்பதற்காகவே எதிர்க்கிறோம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய எதிர்ப்புகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என்று, அங்குள்ள அடிப்படை இராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் தெளிவுபடுத்தினார். மலேசியா எப்போதுமே எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் செயல்பட்டது இல்லை என்றும், அடக்குமுறை அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவின் இந்தக் கொள்கையில் தங்களால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும், அச்சுறுத்தல்களுக்குப் பயந்து கொள்கையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் புதிய கூடுதல் வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜோகாரி கனி கவனித்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Related News