Oct 15, 2026
Thisaigal NewsYouTube

அம்னோவின் ஆதரவைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அம்னோவின் ஆதரவைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்

கோலாலம்பூர், ஜன.3-


டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள பாஸ் கட்சி, அந்தப் பேரணியை மையமாக வைத்து அம்னோ உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட முயற்சிக்கிறது என்று அமானா கட்சியின் உதவித் தலைவரான டத்தோ மாஹ்புஸ் ஒமார் தெரிவித்துள்ளார்.

அந்த ஆதரவு பேரணியானது, உண்மையான தூய உள்ளத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அம்னோவை பிளவுப்படுத்தும் நோக்கில் அதன் உறுப்பினர்களை கவர்வதற்காக இந்த பேரணியை பாஸ் கட்சி மிக சூசகமாக ஏற்பாடு செய்துள்ளது என்று முன்னாள் பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினரான மாஹ்புஸ் ஒமார் குறிப்பிட்டுள்ளார்.

தமது சிறைத்தண்டனையின் எஞ்சியக் காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு தமக்கு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு, வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே அவருக்கு ஆதரவாக பேரணியை கூட்டுவதற்கு பாஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →