புத்ராஜெயா, ஜூன்.04-
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல், வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உள்ளப் பிரச்சினைகளை முன்கூட்டியே தீர்ப்பதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறக்கூடிய, ஏற்றுக் கொள்ளக்கூடிய, விரும்பத்தக்க என்ற மூன்று முக்கியக் கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும், இம்முறை தற்போதைய தலைவர்களுடன் இணைந்து பல புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.








