Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்
அரசியல்

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.01-

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி தயாராக இருப்பதாக அதன் மாநிலத் தலைவர் டத்தோ டாக்டர் சாருடின் ஜமால் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் இயந்திரங்களை உடனடியாக முடுக்கி விடுமாறு அனைத்துப் பிரிவினருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்தேர்தலில் தங்களுடன் இணையப் பிற அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த சட்டமன்றக் கலைப்பு அறிவிப்பு திடீரென வெளியாகி தங்களுக்கு வியப்பை ஏற்படுத்திய போதிலும் மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என ஜோகூர் பாஸ் தலைவர் டத்தோ டாக்டர் Mahfodz Mohamed தெரிவித்துள்ளார்.

Related News